CRIME
அபார்ட்மெண்டில் பயங்கரம்.. பிளாட் எண் 702-க்குள் பிணமாகக் கிடந்த 3 உயிர்கள்.. திடுக்கிடும் பின்னணி..!!
ஹத்ராபாத் சைபராபாத் கச்சிபௌலி பகுதியில் உள்ள ஜெய்பேரி நிர்வாணா அபார்ட்மெண்டின் சி-பிளாக்கில் உள்ள 702 எண் கொண்ட பிளாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பதுலா மாரெடி (65), அவரது மனைவி பாரதி (60) மற்றும் அவர்களின் மென்பொருள் பொறியாளர் மகன் நிஷாந்த் ரெட்டி (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நிஷாந்த் ரெட்டிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தம்பதியினர் கடந்த சில காலமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்சினைகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கச்சிபௌலி போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், உடற்கூறாய்விற்காக உடல்கள் உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
