“அடக் கொடுமையே.. திருமணமான 2 நாட்களிலேயே பிரிவு…” தாயுடன் வசித்த கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக் கொடுமையே.. திருமணமான 2 நாட்களிலேயே பிரிவு…” தாயுடன் வசித்த கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!!

Published

on

விருதுநகர் மாவட்டம் தவசிலிங்காபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தவசியப்பன் (42) என்பவர், அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் அவரது வீட்டிலேயே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டே நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தவசியப்பன், தனது தாய் பிச்சயம்மாளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் இந்த கொலையை அரங்கேற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆமத்தூர் காவல் நிலைய போலீசார், தவசியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தவசியப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுக்கும் இடையே இருந்த திருமணத்தை மீறிய உறவு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in