LATEST NEWS
“ஜூலையிலேயே புகார் கொடுத்தும் கிடப்பில் போட்டது ஏன்..? யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறது..?” அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுத் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூலை மாதமே முறையிட்டும், ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், யாரையாவது காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறதா என்றும் நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இந்த வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிலாக வேறு ஒரு உயரதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும், அந்த விசாரணையை ஐஜி அல்லது டிஐஜி அந்தஸ்திலான அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இறுதியாக, அரசுத் துறையில் பணியாற்றுபவர் தலைமைச் செயலாளராக இருந்தாலும் சரி, தூய்மைப் பணியாளராக இருந்தாலும் சரி, பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளில் இருந்து அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது
