பள்ளி குழந்தைகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இனி ஹோட்டல் ஸ்டைலில் காலை உணவு… முதல்வர் விஜயின் அதிரடி மாஸ்டர் பிளான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பள்ளி குழந்தைகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இனி ஹோட்டல் ஸ்டைலில் காலை உணவு… முதல்வர் விஜயின் அதிரடி மாஸ்டர் பிளான்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ புதிய உயரத்திற்கு கொண்டுசெல்ல முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகளுடனான ஆலோசனையின்போது, “பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும் ஹோட்டல் தரத்தில், சுவையா, சூடா, விதவிதமான உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும். பழைய மாதிரி ஒரே உணவாக இல்லாமல் மெனு மாற வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடக்கமாக, 3,800 டன் ரவை மற்றும் சேமியா கொள்முதல் செய்ய அகில இந்திய அளவில் மெகா டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் 1300 டன் டபுள் ரோஸ்ட் ரவை, 1200 டன் சம்பா ரவை மற்றும் 1300 டன் சேமியா ஆகியவை அடங்கும். வரும் ஜனவரி 1, 2027 முதல் மூன்று மாதங்களுக்கு இந்தப் பொருட்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

Advertisement

கடந்த செப்டம்பர் 22, 2026 அன்று இத்திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி, ரூ.724 கோடி ஒதுக்கி முதலமைச்சர் விஜய் சாதனை படைத்தார். இதன் மூலம் 44,984 பள்ளிகளைச் சேர்ந்த 34.64 லட்சம் குழந்தைகள் பலனடைந்து வருகின்றனர். பசியில்லா தமிழகத்தைப் படைத்து, மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் முதலமைச்சரின் இந்த உன்னத முயற்சிக்குத் தமிழக மக்கள் தங்களது பேராதரவை வழங்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in