“கிளி ஜோசியம் பார்த்தாலும் சரி… குருவி சகுனம் பார்த்தாலும் சரி..” தவெக இருக்குற வரைக்கும் நீங்க அங்கதான்…! எதிர்க்கட்சிகளை பங்கமாய் கலாய்த்த அமைச்சர் அருண்ராஜ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கிளி ஜோசியம் பார்த்தாலும் சரி… குருவி சகுனம் பார்த்தாலும் சரி..” தவெக இருக்குற வரைக்கும் நீங்க அங்கதான்…! எதிர்க்கட்சிகளை பங்கமாய் கலாய்த்த அமைச்சர் அருண்ராஜ்..!!

Published

on

தாராபுரம் இடைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பிரசாரம் செய்தார். இதற்காக மாருதி நகரில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் விஜய் பேசுவதற்கு முன்னதாக அமைச்சர் அருண்ராஜ் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தமிழ்நாட்டின் தங்க மகன், தாய்மார்களின் செல்லப்பிள்ளை, பெண்களின் பாதுகாவலன், குழந்தைகளின் தாய்மாமன் நம் தளபதி. தளபதி மதுரைக்கு சென்றார், மதுரையே குலுங்கியது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற தலைவர் தளபதி. எதிர்க்கட்சிக்காரர்கள் இந்த மண்ணில் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியுமா? துபாய்க்கு போய் தொழில் செய்யலாமா? இரண்டு பேரும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிளி ஜோசியம் பார்த்தாலும் சரி, குருவி சகுனம் பார்த்தாலும் சரி, தவெக இருக்கும் வரை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்கப் போகிறீர்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “2026 பொதுத்தேர்தல் முடிவு விபத்து அல்ல. தமிழக மக்கள் அரசியலை எப்படி புரிந்து வைத்துள்ளார்கள் என்பதன் வெளிப்பாடு. தமிழக மக்கள் பகுத்தறிவோடு சிந்தித்து வாக்களித்திருக்கிறார்கள். அதற்கான சாட்சிதான் 2026 பொதுத்தேர்தல். கொங்கு மண்டலத்தில் 60 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற வைத்து தவெக-வின் கோட்டை என நிரூபித்துள்ளீர்கள். இந்த கொங்கு மக்களுக்கு என்னுடைய சல்யூட். கொங்கு மக்கள் என்றால் ஞாபகத்திற்கு வருவது உண்மை, கடின உழைப்பு, சுயமரியாதை. தற்போது வேதனையான விஷயம் என்னவென்றால், தானும் கொங்கு மண்டலக்காரன் என்று சொல்லிக்கொண்டு, கொங்கு மண்டலப் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு தலைமைப் பண்பே இல்லாத ஒரு தலைவர் இருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். கொங்கு மண்டல மக்களின் அடிப்படை பண்புகளுக்கு எதிராக, உண்மைக்கு புறம்பாக குறுக்கு வழியில், பதவி மட்டுமே முக்கியம் என்பதற்காக செய்யக்கூடாத வேலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.

Advertisement

மேலும், “திமுக கூட கூட்டணி வைக்க முயற்சி செய்யவில்லையா? என கொங்கு மக்கள் அவரிடம் சத்தியம் செய்யக் கேட்க வேண்டும். கொங்கு மக்கள் என்ன ஆனால் எனக்கென்ன என்று பொய் சத்தியம் கூட செய்வார். அதுதான் ஈபிஎஸ். அவரை ஈபிஎஸ் என்பதை விட கேகேஎஸ் என்றுதான் சொல்ல வேண்டும். கூவத்தூர் குறுக்குவழி சாமிதான் அவர். கூவத்தூர் குறுக்குவழி சாமியிடம் கேட்கும் ஒரு கேள்வி, ஓ.பி.எஸ்.-ஐ ஏன் கட்சியை விட்டு நீக்கினீர்கள்? திமுக உடன் உறவு வைத்திருக்கிறார் என்பதனால்தானே? அதே காரணத்திற்காக அதிமுக-வின் உண்மையான தொண்டர்களாக உங்களுடைய அடிப்படை உறுப்பினர் பதவியை இழக்கத்தான் போகிறீர்கள். இது கண்டிப்பாக நடக்கத்தான் போகிறது. இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்றால் ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களுக்கு ஆட்சியை இழந்தது பெரிதல்ல, திரும்பவும் ஆட்சிக்கு வர முடியாது என்ற பதற்றம்தான் மறைமுக கூட்டணியில் ஈடுபட வைத்துள்ளது” என்று அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in