வெடித்த புதிய சர்ச்சை..! முருகனுக்குப் பதில் முதல்வர் விஜய்க்கு ‘அரோகரா’ கோஷமா.? திருச்செந்தூர் கோயில் சர்ச்சைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெடித்த புதிய சர்ச்சை..! முருகனுக்குப் பதில் முதல்வர் விஜய்க்கு ‘அரோகரா’ கோஷமா.? திருச்செந்தூர் கோயில் சர்ச்சைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்…!!

Published

on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, அரசுப் பாடல் குழுவினர் மற்றும் வர்ணனையாளர்கள் முருகப்பெருமானுக்குப் பதிலாக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் சீ. ரமேஷ் ஆகியோருக்கு ‘அரோகரா’ என முழக்கமிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், கடவுளைப் போற்றும் புனிதமான அரோகரா கோஷத்தை அரசியல் தலைவர்களின் தனிநபர் துதிக்குப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபடும் ஆன்மிக விழாவில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இந்து சமய மரபுகளையும், பக்தர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயல் என்றும், ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறானவை என்பதை உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்தச் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்த வர்ணனையாளர்கள் தங்கள் செயலுக்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோர வேண்டும் என வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in