CRIME
“ஷட்டர் வேலை இருக்குனு கூட்டிட்டுப் போய்..” கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்.. ஒரு வாரத்திற்கு பின் சிக்கிய மனைவி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் பிரதான சாலை அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில், கடந்த வாரம் தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்தப் பகுதியில் நடமாடிய ஒரு வாடகை காரை வைத்துத் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டல் சைனீஸ் மாஸ்டராக பணிபுரியும் மகேஷ் குமார் என்பவர் அந்த காரை வாடகைக்கு எடுத்ததும், அவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஷட்டர் தொழிலாளி அப்தவித் ரஹ்மத்தின் மனைவி கம்சா என்ற நிஷாவிற்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும் அம்பலமானது.
தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவர் ரஹ்மத்தை தீர்த்துக்கட்ட நிஷாவும் அவரது கள்ளக்காதலன் மகேஷும் பக்கா பிளான் போட்டுள்ளனர். அதன்படி, தென்காசி தோட்டம் ஒன்றில் ஷட்டர் வேலை இருப்பதாகக் கூறி ரஹ்மத்தை மகேஷ் குமார் காரில் அழைத்துச் சென்றுள்ளார். தோட்டத்தில் வேலைக்காக அவர் அளவெடுத்துக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து கிரைண்டர் கல்லால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ஒரு வாரமாக நீடித்த இந்த மர்மக் கொலை வழக்கில், தற்போது கள்ளக்காதலி நிஷா மற்றும் அவரது கள்ளக்காதலன் மகேஷ் குமார் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
