“இதுவே எனது கடைசி” எரியும் சிதையின் முன் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு.. திருமண வீட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 22 வயது இளைஞர்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இதுவே எனது கடைசி” எரியும் சிதையின் முன் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு.. திருமண வீட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 22 வயது இளைஞர்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் சிபிகஞ்ச் பகுதியில், திருமண ஊர்வலம் புறப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு 22 வயதான மிதுன் மௌரியா என்ற இளைஞர் வயல்வெளியில் துப்பாக்கியால் சுடப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வரை உறவினர் திருமணத்திற்கான விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நிலையில், சனிக்கிழமை (நவம்பர் 14) காலை மிதுனின் சடலம் புதர்களுக்கு இடையே கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சம்பவ இடத்தில் நின்றிருந்த மிதுனின் இருசக்கர வாகனத்தில் எழுதப்பட்டிருந்த இன்ஸ்டாகிராம் கணக்கை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானது. உயிரிழப்பதற்கு சுமார் 21 மணி நேரத்திற்கு முன்பு, எரியும் சிதையின் காணொளியைப் பதிவிட்டு, “இதுவே எனது கடைசி, எனக்குப் பிறகு நான் இருக்க மாட்டேன்” என்று மிதுன் ஸ்டோரி (Story) வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த மர்ம மரணம் குறித்துத் தகவல் அறிந்த சிபிகஞ்ச் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்துள்ளனர். சமூக வலைதளப் பதிவின் அடிப்படையில் இது தற்கொலையா அல்லது யாரேனும் சுட்டுக் கொலை செய்தார்களா என்ற இரு கோணங்களிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in