“அடக்கொடுமையே..!” ஒரே கிராமம்… ஒரே நாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 பெண்கள்.. கிருஷ்ணகிரியை உலுக்கும் விசித்திர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கொடுமையே..!” ஒரே கிராமம்… ஒரே நாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 பெண்கள்.. கிருஷ்ணகிரியை உலுக்கும் விசித்திர சம்பவம்..!!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தில், ஒரே நேரத்தில் 19 வயது இளம்பெண் உட்பட இரு பெண்கள் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்தனா (19) என்ற இளம்பெண்ணிற்கு, அவரது தாய்மாமன் கந்தராஜ் என்பவருடன் திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகிறது. அண்மையில் தனது தாய் வீட்டிற்கு வந்திருந்த கீர்த்தனா, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாலை வீடு திரும்பிய பெற்றோர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வேப்பனப்பள்ளி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சோகம் அடங்குவதற்குள், அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் (45) என்ற மற்றொரு பெண்ணும், அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டறியப்பட்டது. உடனடியாக விரைந்த போலீசார் அவரது உடலையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனாவுக்குத் திருமணமாகி ஓராண்டே ஆவதால் அவரது மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன, இவ்விரு மரணங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in