LATEST NEWS
இதெல்லாம் ஒரு காரணமா..?! சாவியை தொலைத்ததால் பணிநீக்கம்… IT நிறுவனத்திடம் 964 கோடி நஷ்டஈடு கேட்ட ஊழியர்… நீதிமன்றம் அளித்த ஷாக் தீர்ப்பு..!!
இங்கிலாந்தில் அதீத செயல்பாட்டு கோளாறு என்ற பாதிப்புடன் ஹானன் பர்ன்ஸ் பிறந்துள்ளார். இவர் பிர்மிங்காமில் உள்ள கிட்பாட் நிறுவனத்தில் பொறியியல் துணை தலைவராக பணியாற்றி வந்தார். இவர் ஏப்ரல் 2023 அன்று ஆஸ்திரேலியாவின் லோஃபர் நகரில் நடைபெற்ற நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றார். அப்போது அவர் அந்த பயணத்தின்போது, சிறிதளவு மது அருந்தியிருந்ததால் தான் தங்கியிருந்த அறையின் சாவியை தொலைத்துவிட்டார்.
இதனால் அவரால் தனது அறைக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு, வெளியில் உள்ள ஒரு சிறிய அறையில் இரவு முழுவதும் உறங்கியுள்ளார். இதையடுத்து பர்ன்ஸ் தனது தொழில்சார் எல்லைகளை மீறி நடந்து கொண்டதாக கூறி, அவரை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. தான் ஏ.டி.எச்.டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், பணிநீக்கத்தை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தன்னை நியாயமன்றி பணிநீக்கம் செய்ததற்காக கிட்பாட் நிறுவனத்திடம் இருந்து 964 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.
இதை எதிர்த்து கிட்பாட் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், ரூபாய் 964 கோடி இழப்பீட்டு தொகையை நிராகரித்து, ரூபாய் 12..68 கோடி இழப்பீட்டுத் தொகையாக தருவதாகவும், மேலும் ஊழியர் வைப்புத்தொகையாக 1.27 லட்சம் செலுத்தும்படியும் கூறியது.இந்த வழக்கு நீதிபதி ரேச்சல் வெடர்ஸ்பூன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அவர், கிட்பாட் நிறுவனத்தை ஓபன் ஏ.ஐ நிறுவனம் ரூபாய் 3,836.76 கோடிக்கு.கையகப்படுத்தினால், நான்கு ஆண்டுகளில் ஊழியரின் பங்குகளின் மதிப்பு ரூபாய் 267.13 கோடியாக உயரும் என கூறினார். மேலும் நீதிப ஊழியர் கோரிய அசாதாரணமான தொகைக்கு சரியான நிதி நிபுணர்களின் மதிப்பீடு சான்றுகள் இல்லாமல் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தார்
