CRIME
“அம்மாவ விட்டுப் போக மாட்டேன்…” கழிவறையில் புதுப்பெண் செய்த விபரீதம்.. திருமணமான மூன்றே நாளில் முடிந்த சோகம்..!!
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற இளம்பெண்ணிற்கு, புதுச்சேரியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவருடன் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி விமரிசையாகத் திருமணம் நடந்துள்ளது. திருமண சடங்குகள் முடிந்து, செப்டம்பர் 16-ம் தேதி கணவர் வீட்டிற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, தனது தாயைப் பிரிந்து செல்ல வளர்மதிக்குச் சற்றும் மனமில்லை. தாயை விட்டுப் பிரிய நேரிடுமே என்ற கடுமையான மன உளைச்சலில் கண்ணீருடன் கழிவறைக்குச் சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆசிட்டைக் குடித்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் இரண்டு வாரங்களாக உயிருக்குப் போராடி வந்த வளர்மதி, சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான மூன்றே நாட்களில் தாயின் மீதான பாசத்தால் இளம்பெண் ஒருவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்ட இந்த விசித்திரமான மற்றும் துயரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
