“ஜெம் வீரமணிக்கு திமுக வக்காலத்து வாங்கல.. யாரா இருந்தாலும் தண்டிக்கப்படுவாங்க…” துரைமுருகன் ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஜெம் வீரமணிக்கு திமுக வக்காலத்து வாங்கல.. யாரா இருந்தாலும் தண்டிக்கப்படுவாங்க…” துரைமுருகன் ஓபன் டாக்..!!

Published

on

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதை பேசுவது என தெரியவில்லை என்று துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “எஸ்ஐஆர் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதில், தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும்.

மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் எந்த ஊரிலும் தோற்பதற்கு வாய்ப்பே கிடையாது. எங்களை போன்றவர்கள் எல்லாம் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். தலைமை தேர்தல் ஆணையர் ஒன்றும் அமைச்சர் இல்லை. அவரை வீட்டுக்கு அனுப்புவதுதான் முறை. தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பது கட்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று. இதை எல்லோரும் ஒன்று சேர்ந்து தான் செய்ய வேண்டும். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மட்டுமே செய்ய வேண்டும் என அல்ல. எல்லா பூச்சியும் சேர்ந்து தான் செய்யனும்.

Advertisement

எங்கள் ஆட்சியில் மின்சாரம் சரியாக உள்ளது என்றுதான் சொல்வார்கள். சாதாரண குடும்பங்களில் மின்சாரம் எவ்வளவு துண்டிக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க.வை குறை சொல்ல முடியும்? ஜெம் வீரமணிக்கு தி.மு.க. ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லையே. யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. யாராயிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என்று கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in