LATEST NEWS
“அடிப்பாவி.. மதுக்கடைக்குள் புகுந்த பெண் குரங்கு..” ஃபுல் பாட்டில் ‘மேஜிக் மொமண்ட்ஸ்’ காலி.. போதை தலைக்கேறி செஞ்ச காரியத்தை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியின் ஓர்மான்ஜி பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றிற்குள் புகுந்த பெண் குரங்கு ஒன்று, மது பாட்டிலைத் திறந்து குடித்த விசித்திரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வேடிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை பிளாக் சவுக் வணிக வளாகத்தில் உள்ள மதுக்கடையின் கவுண்ட்டருக்குள் நுழைந்த அந்தக் குரங்கு, அங்கிருந்த ‘மேஜிக் மொமண்ட்ஸ்’ மது பாட்டிலை எடுத்து முழுமையாகக் குடித்துள்ளது. மது உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே போதை தலைக்கேறியதால், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து உறங்கியுள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு போதை தெளிந்து எழுந்த அந்த குரங்கு, கடையில் இருந்த பாட்டில்களை உருட்டி பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளது. அதைத் தடுத்து விரட்ட முயன்ற கடையின் ஊழியர் ஒருவரையும் அது கடித்துக் குதறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஓர்மான்ஜி போலீசாருக்கும், அருகில் உள்ள பகவான் பிர்சா முண்டா உயிரியல் பூங்காவின் மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போதை குரங்கைப் பத்திரமாகப் பிடித்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விசித்திரமான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
