“அம்மா என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடு..” தாய்க்கு வந்த கடைசி போன் கால்.. புது பொண்ணு எடுத்த விபத்தை முடிவு.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடு..” தாய்க்கு வந்த கடைசி போன் கால்.. புது பொண்ணு எடுத்த விபத்தை முடிவு.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சீசாமாவ் பகுதியைச் சேர்ந்த கோபால் மிஸ்ரா என்பவருடன், 30 வயதான ருசி மிஸ்ராவிற்கு கடந்த 2026 பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமான வெறும் 9 மாதங்களேயான நிலையில், புகுந்த வீட்டில் ருசி மிஸ்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது கணவர், ருசியின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த ருசியின் தாய், தனது மகளின் கருமையான நிறத்தைக் கேலி செய்து அவரது கணவர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், அடிக்கடி அடித்து உதைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இறப்பதற்கு முந்தைய நாள் ருசி தனக்கு போன் செய்து, “அம்மா, என்னை இங்கிருந்து கூட்டிச் சென்றுவிடு, இவர்கள் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று கதறியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெண்ணின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர்; புகார் பெறப்பட்டதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏசிபி தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in