CRIME
“எவ்வளவோ சொல்லியும் கேட்கல..!” 40 வயது கள்ளகாதலனுக்கு நேர்ந்த கொடூரம்.. அப்பாவும் தம்பியும் சேர்ந்து போட்ட மெகா ஸ்கெட்ச்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காலி வீட்டுமனை இடத்தில் ஆண் சடலம் ஒன்று வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு தாலுகா போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் செங்கல்பட்டு சின்ன நத்தம் பகுதியைச் சேர்ந்த அப்புனு என்கிற ரமேஷ் (40) என்பது உறுதி செய்யப்பட்டது. ரமேஷுக்கும் செங்கல்பட்டு நகர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் பலமுறை கண்டித்தும் அவர்கள் தங்களது உறவைத் தொடர்ந்ததால், ரமேஷைப் பிளான் போட்டு தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவெடுத்ததும் தெரியவந்துள்ளது.
ரமேஷ் மது அருந்திக் கொண்டிருந்த சமயத்தில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளது. இந்தத் திட்டமிட்ட கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 5 பேர் யார் என்பது குறித்து போலீஸார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 3 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது, அப்பகுதி பொதுமக்களிடையே கடுமையான அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
