வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே ஷாக்.. மனைவியை படுக்கையறையில் துடிதுடிக்க.. இரத்தம் படிந்த கத்தியுடன் கணவன் வெறிச்செயல்.. திடுக்கிட வைக்கும் காரணம்..!! – cinefeeds
Connect with us

CRIME

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே ஷாக்.. மனைவியை படுக்கையறையில் துடிதுடிக்க.. இரத்தம் படிந்த கத்தியுடன் கணவன் வெறிச்செயல்.. திடுக்கிட வைக்கும் காரணம்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் லூதியானா, விகாஸ் நகரைச் சேர்ந்த ரவீந்தர் சிங் மற்றும் அவரது மனைவி கமல்தீப் கவுர் (49) ஆகியோர் கடந்த ஆறு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்துவிட்டு, அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை அன்று தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். மனைவியின் மீது கணவருக்கு இருந்த கள்ளத்தொடர்பு சந்தேகத்தின் காரணமாக, அவர்களுக்குள் நீண்ட நாட்களாகவே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன

அடுத்த நாளான சனிக்கிழமை (அக் 31) மாலை, ரவீந்தர் சிங் தனது மகனை ஒரு வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். மகன் வெளியில் சென்ற அந்த நேரத்தில், தனது மனைவி கமல்தீப் கவுரை கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், கொலையில் பயன்படுத்திய இரத்தக் கறைய படிந்த கத்தியைக் கழுவி மறைத்து வைத்துவிட்டு ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளார்.

Advertisement

வீடு திரும்பிய மகன், தனது தாய் காயங்களுடன் படுக்கையறையில் கிடப்பதைக் கண்டு அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து மகனின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துக்கிரி போலீசார், தலைமறைவாக இருந்த கணவர் ரவீந்தர் சிங்கைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in