LATEST NEWS
“நண்பேன்டா…!” மல்லாக்க விழுந்து உயிருக்கு போராடிய ஆமை.. உயிரை காப்பாற்ற சக ஆமை செய்த காரியத்தை பாருங்க… நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!
சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள நான்ஜிங் ஹாங்ஷான் பாரஸ்ட் என்ற மிருகக்காட்சி சாலையில், பகல் வேளையில் ஆமை ஒன்று எதிர்பாராதவிதமாக தரையில் மல்லாக்க விழுந்து கிடந்தது. காயம் காரணமாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், கால்களை மேல்நோக்கி ஆட்டியபடி அந்த ஆமை நீண்ட நேரமாகத் தவித்துக்கொண்டிருந்தது.
இதனைத் தூரத்திலிருந்து கவனித்த மற்றொரு ஆமை, மெதுவாக நகர்ந்து அதன் அருகே வந்தது. பொதுவாக ஆமைகள் மெதுவாகச் செல்லும் குணம் கொண்டவை என்பதால், மீட்பு முயற்சியில் பொறுமையுடன் ஈடுபட்டது. இறுதியாகத் தனது முழு பலத்தையும் திரட்டி, தலையால் முட்டி, போராடிக்கொண்டிருந்த ஆமையைத் தலைகீழாகப் புரட்டி அதன் கால்களில் மீண்டும் நிற்க வைத்தது.
ஆமையின் இந்த நெகிழ்ச்சியான மீட்புப் போராட்டத்தைக் கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் சத்தமிட்டுத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மனிதர்களே சக மனிதர்களுக்கு உதவத் தயங்கும் இந்த காலகட்டத்தில், விலங்குகளுக்குள் இருக்கும் இந்த நட்பு மற்றும் பரஸ்பர உதவி குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது உலகளவில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
