நாகையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்: லாரி மோதி போலீஸ் பலி – நிதியுதவி அறிவித்த முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாகையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்: லாரி மோதி போலீஸ் பலி – நிதியுதவி அறிவித்த முதல்வர் விஜய்..!!

Published

on

நாகை அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த ஆயுதப் படை காவலர் மு. ஜனார்தனன் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ₹40 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை திருவாரூரில் இறக்கிவிட்டு, வாகனத்தை ஓட்டி வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருக்கண்ணங்குடி அருகே காவலர் ஜனார்தனன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை காவலர் ஜனார்தனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், காவலரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, துயரத்தைத் தணிக்க ₹40 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in