CRIME
வயித்து பிழைப்புக்காக சென்ற இடத்தில்… காதலித்து குழந்தை பெற்ற பெண்ணுக்கு 100 கசையடிகள்… சவுதி அரேபியாவில் அரங்கேறிய கொடூர தண்டனை..!!
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த எஸ்தர் வஞ்சிரு முதோனி என்ற பெண், திருமணத்திற்குப் புறம்பான உறவின் மூலம் குழந்தை பெற்றெடுத்த குற்றத்திற்காக 100 கசையடிகள் தண்டனை பெற்றுள்ளார். அந்நாட்டில் நடைமுறையில் உள்ள கடுமையான ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
எஸ்தர் வஞ்சிரு முதோனி, சவுதி அரேபியாவில் தங்கியிருந்தபோது எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதன் மூலம் கர்ப்பமடைந்த அவர், கடந்த 2025-ம் ஆண்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றது அந்நாட்டுச் சட்டப்படி கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திருமண ஆவணங்கள் இல்லாததால் இவ்விவகாரம் காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. இதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிய சவுதி அதிகாரிகள், விசாரணைக்குப் பிறகு அவருக்கு 100 கசையடிகள் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர்.
