LATEST NEWS
திடீர் திருப்பம்..! ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: தலைமறைவாக இருந்த முக்கியப் புள்ளி சரண்… சிறையிலிருந்து வெளியே வர அன்பில் மகேஷ் எடுத்த அதிரடி முடிவு..!!
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான முத்துக்குமார் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில், வசூலிக்கப்பட்ட பணத்தை முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த சரவணன் என்பவர் இன்று (நவம்பர் 11) சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று (நவம்பர் 10) தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
