“மனைவி மாதம் ₹1.5 லட்சம் கேட்கிறார்” நானே சும்மா இருக்கிறேன் எப்படி கொடுப்பேன்..? நடிகர் சரவணன் உருக்கம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“மனைவி மாதம் ₹1.5 லட்சம் கேட்கிறார்” நானே சும்மா இருக்கிறேன் எப்படி கொடுப்பேன்..? நடிகர் சரவணன் உருக்கம்..!!

Published

on

‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப் தொடர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர் சரவணன் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் வெளியீட்டை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சரவணன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் தனது நிஜ வாழ்க்கை வேதனைகளைப் பகிர்ந்துகொண்ட சரவணன், “என்னுடைய வாழ்க்கையிலேயே எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. நான் என்னுடைய மனைவியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தற்போது உயர் நீதிமன்றத்தில் (High Court) மேல்முறையீடு செய்துள்ளேன்” என்று ஓப்பனாகத் தெரிவித்தார்.

Advertisement

மேலும், “என் மனைவி தன்னிடம் மாதம் 1.5 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்கிறார்” என்று குறிப்பிட்ட அவர், “நானே பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்; இதில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு நான் எங்கே போவது?” என்று மிகுந்த வேதனையுடன் கேள்வி எழுப்பினார். வெப் தொடரின் தலைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த அவரது இந்த நிஜ வாழ்க்கை உரை தற்பொழுது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in