“ஐயோ படிச்சதும் எனக்கு குபீர்னு சிரிப்பு வந்திட்டு” அதுதான் உங்க முதன்மை பணியா..? பிரதமரின் உரையை கிண்டல் செய்த CPM சண்முகம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ படிச்சதும் எனக்கு குபீர்னு சிரிப்பு வந்திட்டு” அதுதான் உங்க முதன்மை பணியா..? பிரதமரின் உரையை கிண்டல் செய்த CPM சண்முகம்…!!

Published

on

டெல்லியில் நடைபெற்ற தசரா திருவிழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு சேவை செய்வதே தங்களது அரசின் உச்சபட்ச முன்னுரிமை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ராமராஜ்ஜியக் கோட்பாடுகள், மக்கள் நலன் மற்றும் பாகுபாடற்ற ஆட்சி முறை குறித்தும் அவர் தனது உரையில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

பிரதமரின் இந்த உரை மற்றும் சமூக ஊடகப் பதிவைச் சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் நலனே அரசின் முதன்மைப் பணி” என்ற பிரதமரின் கூற்றைப் படித்தவுடன், தமக்கு சத்தமாக ‘குபீர்’ என சிரிப்புதான் வந்தது என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பிரதமர் மோடி பேசிய ராமராஜ்ஜியக் கோட்பாடுகளுக்கும், தற்போதைய பாஜாக தலைமையிலான மத்திய அரசின் நிஜமான செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை ஒப்பிட்டு இந்த விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசு, மேடைகளில் மட்டும் மக்கள் நலன் குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருப்பதாக அவர் கிண்டல் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in