LATEST NEWS
டிவிஸ்டு மேல டிவிஸ்டு…! “கேஸை மூடிமறைக்க பார்த்ததே தவெக தான்” ஜெம் வீரமணி வழக்கை உலுக்கிய சண்முகத்தின் பகீர் பேட்டி..!!
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை தவெக அரசுதான் வெளியில் கொண்டு வந்ததாக கூறுவது முற்றிலும் தவறு என்றும், உண்மையில் இந்த வழக்கை தவெக அரசு முடித்து வைக்கவே பார்த்தது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வழக்கில் தற்போதைய தமிழக அரசு தன்னிச்சையாக எந்த நேர்மையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை, மாறாக நீதிமன்ற அழுத்தத்தின் காரணமாகவே நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் தற்போதைய தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில், இந்த வழக்கை முடித்துக் கொள்வது என்கிற தொனியில்தான் மொழியமைப்பு இருந்தது என்று சண்முகம் சுட்டிக்காட்டினார். எனவே, தங்களது முயற்சியால்தான் இந்த வழக்கு தீவிரமடைந்துள்ளது என்று தவெகவினர் கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
ஜெம் வீரமணிக்கு எதிரான இந்த பாலியல் வழக்கு தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தவெக அரசு காரணமல்ல, மாறாக போக்சோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிதான் இதற்கு முழு முதற் காரணம் என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தலையீடு மட்டுமே உரிய நடவடிக்கைகளுக்கு வழிவகுத்ததாகக் கூறிய அவர், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான தண்டனைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
