LATEST NEWS
BREAKING: சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தூண் சரிந்தது.. அகிலேஷ் யாதவின் அரசியல் வழிகாட்டி ராம் கோவிந்த் சவுத்ரி காலமானார்.. பெரும் சோகம்..!!
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சருமான ராம் கோவிந்த் சவுத்ரி (73) இதய பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் 1977 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 8 முறை எம்.எல்.ஏ-வாகப் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய பெருமைக்குரியவர். கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் மறைவுக்குப் பிறகு, தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மிகச்சிறந்த அரசியல் வழிகாட்டியாக செயல்பட்டு வந்த இவரது இழப்பு, ஒட்டுமொத்த சமாஜ்வாதி கட்சியினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் இந்த முக்கிய தூணின் மறைவு சமாஜ்வாதி கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. கட்சியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் உள்கட்சி ஆலோசனைகளில் மிக முக்கிய பங்காற்றி வந்த ராம் கோவிந்த் சவுத்ரியின் மறைவிற்கு, அகிலேஷ் யாதவ் உட்பட பல அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
