“இந்தியர் தான் அந்த வீடியோ எடுத்தாங்க” சவுதியில் தம்பதிக்கு தூக்குத் தண்டனை… இந்தியர் மீது பழிபோட்ட பாகிஸ்தான்… வதந்தியின் பின்னணி அம்பலம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்தியர் தான் அந்த வீடியோ எடுத்தாங்க” சவுதியில் தம்பதிக்கு தூக்குத் தண்டனை… இந்தியர் மீது பழிபோட்ட பாகிஸ்தான்… வதந்தியின் பின்னணி அம்பலம்..!

Published

on

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தம்பதியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷிர் மற்றும் ஸ்வீட்டி அக்தர் ஆகிய இருவருக்கும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், சவுதி அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது உடல்களைத் தாய்நாட்டிற்கு அனுப்புவது குறித்த அறிவிப்போ வராததால் பங்களாதேஷ் அரசும், அவர்தம் குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தச் சூழலில், தூக்கிலிடப்பட்ட அந்த தம்பதியரை இந்தியர் ஒருவர்தான் வீடியோ எடுத்ததாகவும், அதனால்தான் அவர்களுக்குத் தண்டனை கிடைத்தது என்றும் கூறி சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி தீயாய் பரவி வருகிறது. ஆனால், இந்தச் செய்திகளைப் பாகிஸ்தானைச் சேர்ந்த தனிநபர்கள்தான் திட்டமிட்டு முதன்முதலில் பரப்பியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவிதமான ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் இத்தகவல், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையிலான நட்புறவைச் சீர்குலைப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு பொய்ப் பிரசாரம் என்று தெரியவந்துள்ளது.

Advertisement

மறுபுறம், இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான விவரங்களை வெளியிடாமல் ரகசியப் போக்குடன் செயல்படுவது சர்வதேச அளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மரண தண்டனைக்கு முன்பு பங்களாதேஷ் அரசுக்குத் தகவல் தெரிவிக்காததும், டாக்காவின் தூதரகங்கள் உடனடியாகத் தலையிட்டு இதனைத் தடுத்து நிறுத்தத் தவறியதும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சவுதி அரசின் வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகளும், மறுபுறம் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பி அரசியல் லாபம் தேடும் சதிகளும் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in