கண்ணுக்குக் கண் பதிலடி…! கையை வைத்தால் செங்கடல் மூடல்… சவுதி வணிகக் கப்பல்களுக்கு ஹூதிகள் போட்ட செக்.. உலகளவில் பெரும் பதற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணுக்குக் கண் பதிலடி…! கையை வைத்தால் செங்கடல் மூடல்… சவுதி வணிகக் கப்பல்களுக்கு ஹூதிகள் போட்ட செக்.. உலகளவில் பெரும் பதற்றம்..!!

Published

on

சவுதி அரேபியாவுக்கு எதிராக உடனடி கடல்வழி முற்றுகையை அமல்படுத்துவதாக ஏமனின் ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், ஏமன் மக்கள் அனைவரும் உடனடியாக ஆயுதமேந்தி போருக்குத் தயாராக இருக்குமாறும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தை சவுதி தாக்கியதற்குப் பதிலடியாக, சவுதியின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த கடல்வழி முற்றுகை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏமனின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, சவுதி அரேபியாவின் பல ஆண்டுகாலத் தடைகளுக்குப் பதிலடியாக இந்த முற்றுகை உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதியின் வணிகக் கப்பல்களை இலக்காக்கி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாப் அல்-மண்டேப் ஜலசந்தி, செங்கடலின் முக்கியப் பாதையாகும். இந்த முற்றுகையால் உலகின் எண்ணெய் விநியோகத்தில் 7 சதவீதம் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் சவுதியின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக முடங்கும் சூழல் உருவாகியுள்ளதோடு, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in