LATEST NEWS
“என்னப்பா நடக்குது இங்க..? சிறுவர்கள் கையில் மதுவும் போதையும்! போபாலில் வெளிச்சத்திற்கு வந்த நள்ளிரவு பார்ட்டி கூத்து.. வீடியோ ஆதாரங்களுடன் கொந்தளித்த பஜ்ரங் தளம்..!!”
மத்திய பிரதேச மாநிலம் போபால் ஹபிப்கஞ்ச் பகுதியில் உள்ள ராணி கமலபதி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ‘பன்சால் பிளாசா’வில் இயங்கி வரும் ஹயாத் பேலஸ் ஹோட்டலில் நள்ளிரவில் பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர். இந்த நள்ளிரவு பார்ட்டி குறித்து தகவல் அறிந்த பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் திரளாக ஹோட்டலுக்குள் சென்று கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் இதுபோன்ற பார்ட்டிகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள தொண்டர்கள், இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களில் பலர் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்-சிறுமியர் என்றும், அங்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். எனினும், இதில் பங்கேற்றவர்களின் வயது விவரங்களோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தோ உடனடியாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
https://www.instagram.com/reel/Dc-A5d0yUdZ/?utm_source=ig_web_button_share_sheet
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுத்தனர். மேலும், இந்த நள்ளிரவு நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஹோட்டல் நிர்வாகம் மற்றும் அமைப்பாளர்கள் முறையான அனுமதி பெற்றிருந்தனரா என்பது குறித்தும், சிறுவர்கள் பங்கேற்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
