LATEST NEWS
“என்னடா இப்படி பண்ணிட்ட..” இரயில் நிலையத்திற்குள் நுழைந்த வந்த ‘விஐபி’ விருந்தினர்கள்… பயணிகள் முன் செய்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ..!
நாட்டின் முதல் உலகத்தரம் வாய்ந்த மாதிரி இரயில் நிலையமான போபாலில் உள்ள ராணி கமலாபதி இரயில் நிலையத்திற்குள், இரண்டு எருமைகள் புகுந்து நடைமேடையில் சாணம் இட்டு அசுத்தம் செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த இரயில் நிலையத்திற்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் இரயில் வந்து நின்ற அதே நேரத்தில், இந்த மாடுகள் நடைமேடையில் சாவகாசமாக உலா வந்து பயணிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் தூய்மைக்காகப் பாராட்டப்பட்ட ஒரு முக்கிய இரயில் நிலையத்திற்குள் இந்த விலங்குகள் எவ்வாறு நுழைந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த இரண்டு எருமைகளும் நீண்ட நேரம் நடைமேடை முழுவதும் எவ்வித பயமுமின்றி உலா வந்த நிலையில், அங்கிருந்த பயணிகள் சிலர் இந்த விசித்திரமான காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த எருமைகளின் உலா மற்றும் இரயில் நிலைய நிர்வாகத்தின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது.
