“அரசியலுக்கு வர எல்லாருக்கும் ஆசை இருக்கும்.. ஆனா…” – தனுஷின் அரசியல் எண்ட்ரி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த மாஸ் ரிப்ளை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசியலுக்கு வர எல்லாருக்கும் ஆசை இருக்கும்.. ஆனா…” – தனுஷின் அரசியல் எண்ட்ரி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த மாஸ் ரிப்ளை..!!

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் புதிய கட்சி தொடங்கி அரசியலில் களம் இறங்க உள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரே வரியில் நச்சுனு பதிலளித்துள்ளார். சமீபகாலமாக தனுஷின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீயாய் பரவி வரும் நிலையில் அமைச்சரின் இந்தப் பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களைச் சட்டமன்ற தொகுதி வாரியாகப் பிரித்ததோடு, அவற்றை நற்பணி இயக்கமாகவும் அண்மையில் மாற்றியமைத்தார். இதனைத் தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற அவர் அங்கு இரண்டு நாட்கள் முகாமிட்டு, அரசியல் தொடர்பான பல்வேறு முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

Advertisement

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் செங்கோட்டையனிடம், “நடிகர் தனுஷ் புதிய கட்சி தொடங்குவது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தனது பாணியில் சுருக்கமாகப் பதிலளித்த அமைச்சர், “அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. அது மக்கள் தீர்ப்பு” என ஒரே வரியில் கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in