அடக்கடவுளே..! மனைவியைக் கொன்று சடலத்துடன் தூங்கிய கணவன்..! காலையில் நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே..! மனைவியைக் கொன்று சடலத்துடன் தூங்கிய கணவன்..! காலையில் நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்..!!

Published

on

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகர், தாசரதன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). ஆன்லைன் டெலிவரி நிறுவனமான செப்டோவில் பணியாற்றி வந்த இவருக்கு, சுதா (28) என்ற மனைவியுள்ளார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத நிலையில், கணவன்-மனைவி இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி இரவு இருவரும் வீட்டில் ஒன்றாக மது அருந்தியபோது, சுதா மேலும் மது கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், இரவு 9 மணியளவில் சுதாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

மனைவி உயிரிழந்தது தெரியாமல் மதுபோதையில் அங்கேயே தூங்கிய லோகநாதன், நள்ளிரவு 2.30 மணியளவில் எழுந்து மனைவியை எழுப்ப முயன்றபோதுதான் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மறுநாள் காலை வீட்டை பூட்டிவிட்டுத் தனது அக்கா வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறியுள்ளார். பின்னர் வழக்கறிஞர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லோகநாதன் ஆஜரானார். இத்தகவலறிந்த துரைப்பாக்கம் போலீசார் அவரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

Advertisement

தகவலறிந்த துரைப்பாக்கம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் விமல்ராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று சுதாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், லோகநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், இதுகுறித்து சுதா தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in