LATEST NEWS
“ஏன்டா இப்படி பண்றீங்க.. ?” காதலியுடன் போன் பேசிய வாலிபர்.. அறைக்குள் நுழைந்த நண்பர்கள் செய்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
டெல்லியில் ஒரே அறையில் தங்கி ஒன்றாகப் படித்து வந்த மூன்று நண்பர்களுக்கு இடையே, ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த ஒரு விளையாட்டான விஷயம் விபரீதமாக மாறிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்று விடுமுறை நாள் என்பதால் மூன்று நண்பர்களும் அறையில் இருந்தபோது, அதில் ஒருவருக்கு அவருடைய காதலியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அழைப்பை ஏற்றுப் பேசிய அந்த நண்பர், பின்னர் மொபைலைச் சற்றே தள்ளி வைத்துள்ளார்.
அப்போது, அறையில் இருந்த மற்ற இரு நண்பர்களும் சேர்ந்து, போனில் பேசிக் கொண்டிருந்த நண்பரைப் பலவந்தமாகப் பிடித்து அவரது வாயைப் பொத்தியுள்ளனர். அவர் போனில் தொடர்ந்து பேசவும், கத்தவும் எவ்வளவோ முயற்சி செய்தும், மற்ற நண்பர்கள் அவரது வாயை விடாமல் அமுக்கி விளையாடியுள்ளனர். நண்பர்களுக்குள் கேலி கிண்டல்களும், விளையாட்டுகளும் இருப்பது சாதாரணம்தான் என்றாலும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இவ்வளவு தூரம் எல்லையைத் தாண்டிச் செல்வது முறையல்ல; இதனால் ஒருவருக்குப் பலத்த காயம் அல்லது மூச்சுத்திணறல் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இக்காட்சியைப் பார்த்தவர்கள் எச்சரிக்கின்றனர்.
