LATEST NEWS
“அம்மாடியோ.. 30 நொடிகளில் 32 முறை சரமாரி அறை..” உடற்பயிற்சி கூடத்தையே ரணகளமாக்கிய இரண்டு வாலிபர்கள்.. பதறவைக்கும் பகீர் வீடியோ..!!!
ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு வாக்குவாதம், பயங்கரமான அடிதடி சண்டையாக மாறிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வைரல் வீடியோவில், டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வாலிபரை, மற்றொரு வாலிபர் தொடர்ச்சியாகக் கொடூரமாகத் தாக்கி, முகத்தில் மாறி மாறி அறையும் காட்சிகள் பதிவாகியுள்ளன. உடற்பயிற்சி கூடத்தில் இருந்த மற்றவர்கள் தடுத்து நிறுத்த முயன்றும், அந்த வாலிபர் ஆக்ரோஷமாகத் தாக்குதலைத் தொடர்ந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த வாலிபர், டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோதே சுமார் 32 முறைக்கும் மேலாகக் கன்னத்தில் சரமாரியாக அறையப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான நபர் தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கூட முடியாமல் நிலைதடுமாறும் இந்த திடுக்கிடும் காட்சி நெட்டிசன்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலுக்கான அசல் காரணம் என்ன என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
