CRIME
“மாரடைப்பால் இறந்துட்டாரு..” மனைவி சொன்ன பொய்யை நம்பிய அடக்கம் செய்த குடும்பம்.. 3 நாட்களுக்குப் பிறகு சிக்கிய செல்போனால் அம்பலமான பகீர் உண்மை..!!
ஒரு குடும்பத்தில் திடீரென ஏற்பட்ட மரணம் முதலில் இயற்கையானது என்றே கருதப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு செல்போனில் இருந்த உரையாடல்கள், இந்த மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி போலீஸ் விசாரணையைத் தூண்டியுள்ளது. உயிரிழந்த 30 வயதான தாலிப்புக்கு இல்மா (27) என்ற மனைவியும், மூன்று வயது மகளும் உள்ளனர். அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த இல்மா, செப்டம்பர் 28ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுக்கையிலேயே உயிரிழந்ததாகக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். உறவினர்களும் இதை நம்பியதால் மருத்துவப் பரிசோதனை ஏதுமின்றி மறுநாள் அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்த சில நாட்களில் தாலிப்பின் செல்போனை உறவினர்கள் கேட்டபோது அது காணவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் வீட்டில் தேடியபோது ஆடைகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த செல்போன் சிக்கியது. அதில் தாலிப்புக்கும், மனைவியுடன் தொடர்பில் இருந்த அமன் என்பவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இல்மாவிடம் கேள்வி எழுப்பியபோது, தாலிப் தன்னைத் தாக்கியதால் அமனைத் தொடர்புகொண்டதாகவும், அமன் மற்றொரு நபருடன் வந்து தாலிப்பைத் தாக்கித் துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. தாலிப் உயிரிழந்த பிறகு அவர் மாரடைப்பால் இறந்ததாக நம்ப வைத்து உடலை அடக்கம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது தாலிப்பின் உறவினர் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இல்மா போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அமன் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மரணத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிய தாலிப்பின் உடலை மீண்டும் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் செல்போன் முக்கியத் தடயமாக மாறியுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகே முழுமையான உண்மைகள் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
