“உள்ளே வாங்க தம்பி..” புத்திமதி சொன்ன கண்டக்டர்.. அடுத்த நொடியே முகத்தை சிதைத்த பள்ளி மாணவர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உள்ளே வாங்க தம்பி..” புத்திமதி சொன்ன கண்டக்டர்.. அடுத்த நொடியே முகத்தை சிதைத்த பள்ளி மாணவர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

சென்னை போரூரில் தடம் எண் 26 ஐயப்பன்தாங்கல் – வடபழனி அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை, உள்ளே வருமாறு கூறிய நடத்துநர் மீது மாணவர்கள் சரமாரி தாக்குதல் நடத்திய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது,. அந்தப் பேருந்தில் தானியங்கி கதவு வசதி இருந்ததால், மாணவர்களிடம் நடத்துநர் நல்ல புத்திமதி கூறி உள்ளே அழைத்தபோது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஓடும் பேருந்திலேயே நடத்துநரை கொடூரமாகத் தாக்கியதில் அவருக்கு வாய்ப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பேருந்திற்குள் இருந்த சக பயணி ஒருவர் இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்து சாலையோரமாக நிறுத்தப்பட்ட நிலையில், பள்ளி நேரங்களில் மாணவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார் என்பது குறித்தும், இந்த விபரீத மோதலுக்கான காரணம் குறித்தும் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in