சாவு எப்படி வருது பாருங்க..? பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை எமன் போல் வந்து தூக்கிய பைக்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி வைரல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாவு எப்படி வருது பாருங்க..? பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை எமன் போல் வந்து தூக்கிய பைக்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி வைரல்..!!

Published

on

ஹைதராபாத் டேங்க் பண்ட் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை நிமஜ்ஜனப் பணியின் போது, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கன்ன கணேஷ் அடையாளம் தெரியாத பைக் மோதி பலியானார். இவர் தெலங்கானா மாநிலத்தின் கொத்தகுடெம் டூ டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு மற்றும் நிமஜ்ஜனப் பணிகளுக்காக இவர் ஹைதராபாத் நகருக்கு வந்திருந்தார்.

டேங்க் பண்ட் சாலையில் அவர் கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது அதிவேகமாக வந்த பைக் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. விபத்தை ஏற்படுத்திய நபர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் படுகாயமடைந்த வெங்கன்ன கணேஷ் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய நபரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in