LATEST NEWS
“அன்று என் மானத்தைக் காப்பாற்றிய அண்ணன்.. இன்று தீப்பிடித்து எரிந்த லாரியிலிருந்து உயிரைக் காப்பாற்றிய தங்கை..!” 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் விதி நிகழ்த்திய அதிசயம்.. நெகிழ்ச்சி பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் நள்ளிரவு 1:30 மணியளவில் இரண்டு கொடூரர்களின் பிடியில் சிக்கிய 17 வயதுச் சிறுமி கிரணைத் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய முகம் தெரியாத லாரி ஓட்டுநர் அஸ்லமுக்கும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் தீப்பிடித்து எரிந்த லாரியிலிருந்து அவரை உயிருடன் மீட்ட கிரணுக்கும் இடையிலான நெகிழ்ச்சியான சம்பவம் மனிதநேயத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. அன்று நள்ளிரவு இருட்டில் கிரணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லாரி ஓட்டுநர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தபோதும் சற்றும் பின்வாங்காமல், “என் உயிர் போனாலும் பரவாயில்லை, இன்று இந்தப் பெண்ணின் மானம் பறிபோக விடமாட்டேன்” எனப் போராடி அந்தக் கொடூரர்களை விரட்டியடித்துவிட்டு மயங்கி விழுந்தார். ஒரு தேவதையைப் போல வந்து எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கிரணைக் காப்பாற்றிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஆனால், சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விதி அதே வளைவில் ஒரு பயங்கரமான சோதனையை நிகழ்த்தியது; தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு லாரி அதே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரிக்குள் சிக்கிக்கொண்ட ஓட்டுநர், “யாராவது என்னைக் காப்பாற்றுங்கள், நான் தீயில் கருகிச் சாகப் போகிறேன்” என மரண ஓலமிட்டுக் கதறினார். அப்போது, அருகிலிருந்த குடிசையிலிருந்து ஓடி வந்த இளம்பெண் ஒருவர், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயையும் பொருட்படுத்தாமல் உள்ளே பாய்ந்து, மரணத்தின் பிடியிலிருந்து அந்த ஓட்டுநரைப் பத்திரமாக வெளியே இழுத்து உயிரைக் காப்பாற்றினார்.
நினைவு திரும்பியதும், தன்னைக் காப்பாற்றிய பெண்ணைப் பார்த்து நடுங்கும் குரலில் “அன்று இரவு நான் காப்பாற்றிய பெண் நீதானே?” என அந்த லாரி ஓட்டுநர் அஸ்லாம் கேட்டபோது, கிரண் அவரைக் கட்டியணைத்துக் கண்ணீர் மல்க “ஆம் அண்ணா, இன்று உங்களின் உயிர்க் கடனை நான் தீர்த்துவிட்டேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார். தற்போது ஒவ்வொரு ஆண்டும் அஸ்லமுக்கு கிரண் பாசத்துடன் ராக்கி கட்டி சகோதரத்துவத்தைக் கொண்டாடி வருகிறார். வெறுப்பு நிறைந்த இந்தக் காலகட்டத்தில், சாதி, மதங்களைக் கடந்து நிற்கும் மனிதநேயமே மிகச் சிறந்த மதம் என்பதை இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் உலகுக்கு உணர்த்தியுள்ளது.
