LATEST NEWS
வச்சான் பாரு ஆப்பு..! இனி கடைகளில் ஆசிட் விற்றால் அவ்வளவுதான்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தனியார் மற்றும் தனி நபர்கள் ஆசிட் சில்லறை விற்பனை செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. கட்டுப்பாடு இல்லாமல் ஆசிட் விற்கப்படுவதே, ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டுமே ஆசிட் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசு மருத்துவமனை மருந்தகங்களில் மட்டுமே ஆசிட் விற்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆசிட் வாங்குபவரின் ஆதார் மற்றும் அடையாள அட்டை விவரங்களைக் கட்டாயம் சேகரித்து வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது
