“என் சகோதரர் ஸ்டாலின்” ராகுல் போட்ட அந்த ஒரு ட்வீட்.. மனம் மாறுவார் திமுக தலைவர் ஸ்டாலின்../ கடைசி நேரத்தில் சென்னை விரையும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் சகோதரர் ஸ்டாலின்” ராகுல் போட்ட அந்த ஒரு ட்வீட்.. மனம் மாறுவார் திமுக தலைவர் ஸ்டாலின்../ கடைசி நேரத்தில் சென்னை விரையும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்..!!

Published

on

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் சென்னை சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு ஸ்டாலின் மற்றும் திமுகவிடம் வலியுறுத்தவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்திய ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், தேர்தல் வரைபடத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு இது வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார்” என ராகுல் காந்தி தனது பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார். தேச நலன், தமிழ்நாட்டின் நலன் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க இந்த மசோதாவை அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

முன்னதாக, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் தமிழ்நாட்டின் 7.18 சதவீதப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்ற எழுத்துப்பூர்வ உத்தரவாதம் மசோதாவில் இடம்பெற்றுள்ளதால், அதற்கு ஆதரவளிக்கப் போவதாக திமுக அறிவித்திருந்தது. இந்தச் சூழலில், நாளை (நவம்பர் 30) தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, திமுகவின் முடிவை மாற்றும் இறுதிக்கட்ட முயற்சியாக சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி சென்னை வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in