‘மேஜிக் மஷ்ரூம்’ மாயவலையில் சிக்கும் இளைஞர்கள்… ஊட்டி காட்டுக்குள் படையெடுப்பு… உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘மேஜிக் மஷ்ரூம்’ மாயவலையில் சிக்கும் இளைஞர்கள்… ஊட்டி காட்டுக்குள் படையெடுப்பு… உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து…!!

Published

on

ஊட்டியின் தட்பவெப்பநிலை காரணமாக வனப்பகுதிகளில் ‘மேஜிக் காளான்’ எனப்படும் போதை தரும் காளான்கள் இயற்கையாக விளைகின்றன. இவற்றைத் தேடிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, கடந்த காலங்களில் போதை காளான் உட்கொண்டதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த ஒருவர் ஊட்டியில் போதை காளான் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவைத் தொடர்ந்து காளான் கிடைக்கும் இடத்தைக் கண்டறியப் பலரும் விசாரிப்பதாகவும், சிலர் நேரடியாகத் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட நபர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தான காட்டுப் பகுதிகளில் இளைஞர்கள் புதிதாகப் போதையைத் தேடி அலைவது அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

நச்சுத்தன்மை கொண்ட இந்தக் காளான்களை உட்கொள்வதால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் உயிரிழப்பு வரை ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் சங்கிலியில் இந்தக் காளான்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளதால், இவற்றைத் தேடி அழிப்பது மற்ற உயிரினங்களையும் பாதிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in