LATEST NEWS
“விழா நிகழ்ச்சிகளுக்கு யாரும் என்னை அழைக்க வேண்டாம்” வைகோ எடுத்த திடீர் முடிவு.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!
மதுரையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அடுத்த இரண்டு மாதங்களுக்கு தம்மை எந்தவித விழா நிகழ்ச்சிகளுக்கும் அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவர்கள் தமக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கடினமாக அலைந்து கொண்டிருப்பதால் உடல்நிலை மிகவும் சோர்வடைந்துவிட்டதாகவும், எனவே ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு மாதங்களுக்கு விழா அழைப்புகளைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
