“அவரை என் செல்லப் பிள்ளையா வச்சிருந்தேன்” செந்தில் பாலாஜி அதிமுகவை விட்டு வெளியேறக் காரணமே யார் தெரியுமா..? கரூரில் ஈபிஎஸ் உடைத்த ரகசியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவரை என் செல்லப் பிள்ளையா வச்சிருந்தேன்” செந்தில் பாலாஜி அதிமுகவை விட்டு வெளியேறக் காரணமே யார் தெரியுமா..? கரூரில் ஈபிஎஸ் உடைத்த ரகசியம்..!!

Published

on

கரூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் கட்சித் தாவல் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜயபாஸ்கர் வெளியேறிவிட்டால் கரூரில் அதிமுக இருக்காது என்று கூறப்பட்ட போதிலும், தற்போதுதான் மாவட்டத்தில் தொண்டர்கள் அதிக அளவில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜி முன்பு அதிமுகவில் இருந்து வெளியேறியதற்கு எம்.ஆர். விஜயபாஸ்கர்தான் முக்கியக் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். செந்தில் பாலாஜி எந்தக் கட்சிக்குச் சென்றாலும், அந்தக் கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இறுதியாக, எம்.ஆர். விஜயபாஸ்கரைத் தான் கரூரில் ஒரு ‘செல்லப் பிள்ளையாக’ வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் பதவி மோகத்தால் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in