LATEST NEWS
அதிமுகவில் இணையும் நடிகர் தனுஷ்..? வலைவீசும் ராஜேந்திர பாலாஜி… தமிழக அரசியலில் அடுத்த மாஸ் மூவ்..!!
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், பிரபல தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். ஏழை எளிய மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தனுஷ் என்ற பெயரே ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தனுஷ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என்றும் ராஜேந்திர பாலாஜி தனது பேட்டியில் பாராட்டியுள்ளார்.
திரையுலகில் இருந்து பல பிரபலங்கள் அரசியல் நோக்கி நகர்ந்து வரும் வேளையில், தனுஷின் அரசியல் வருகை குறித்த யூகங்களுக்கு மத்தியில் அதிமுகவின் இந்த பகிரங்க அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையும் பட்சத்தில், அது இளைஞர்கள் மத்தியில் கட்சிக்குக் கூடுதல் பலத்தை சேர்க்கும் என்று அதிமுக தரப்பில் நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த அழைப்பு குறித்தோ அல்லது அரசியல் வருகை குறித்தோ நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
