LATEST NEWS
“திமுக சொன்னது சொன்னது தான்..” யூகங்களும், முணுமுணுப்புகளும் எங்களை அசைக்க முடியாது… தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் அதிரடி..!!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது X சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டின் பங்கு தற்போதைய 7.18%-லிருந்து ஒருபோதும் குறையக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கும் இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களில் பரப்பப்படும் யூகங்களும், விமர்சகர்களின் முணுமுணுப்புகளும் தங்கள் நிலைப்பாட்டை எந்த வகையிலும் அசைத்துப் பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
