LATEST NEWS
“நீங்கள் நில்லுங்கள்…” ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த அதிரடி ஆஃபர்.. கரூர் இடைத்தேர்தலில் திடீர் ட்விஸ்ட்.. அதிர்ந்துபோன அரசியல் வட்டாரம்..!!
மு.க.ஸ்டாலினை கரூரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த வி. செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில், “கரூரில் உங்களை அமோகமாக ஜெயிக்க வைப்பது எனது கடமை; நீங்கள் மட்டும் இங்கு போட்டியிட்டால் போதும்” என்று செந்தில் பாலாஜி அவரிடம் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், “அப்பாவைக் காணோம் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்பா சட்டசபைக்குள் வந்துவிட்டார் என்று கம்பீரமாகக் காட்டுவோம்” என்றும் அவர் உணர்ச்சிபொங்கப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இருப்பினும், செந்தில் பாலாஜி கூறிய இந்த அதிரடி ஆலோசனைகள் மற்றும் வேண்டுகோள்கள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ‘ஸ்டாலின்’, அதற்கு உடனடியாக எந்த ஒரு பதிலோ அல்லது சம்மதமோ தெரிவிக்காமல் மௌனம் காத்ததாகத் தெரிகிறது. தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தற்போதைய திமுக அரசுக்கு எதிராகப் பல்வேறு அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழ்நிலையில், கரூரில் திமுகவின் தேர்தல் வியூகம் எவ்வாறு அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இந்தத் தகவல் மூலம் தமிழக அரசியலில் மேலும் அதிகரித்துள்ளது.
