LATEST NEWS
அறிவாலயத்தில் உச்சகட்ட பரபரப்பு..! கொளத்தூரில் மீண்டும் மு.க.ஸ்டாலின் கம்பேக்..? வாழ்வா? சாவா? போராட்டத்தில் திமுக தலைமை..!!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன், அங்கு மீண்டும் களமிறங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாகத் தான் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி என்பதால், அங்கு மீண்டும் போட்டியிடுவது குறித்த எதிர்பார்ப்பு திமுக நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்வதில் திமுக தலைமைக்குப் பல்வேறு அரசியல் கணக்குகள் உள்ளன. ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றால், அது தற்போதைய தவெக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகப் பார்க்கப்படும்; இது திமுக தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் எனக் கருதப்படுகிறது. அதேசமயம், இந்த இடைத்தேர்தலைத் தவிர்க்க முடிவெடுத்தால், சட்டமன்றத்திற்குள் நுழைய 2031-ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதையும் கட்சித் தலைமை கவனத்தில் கொண்டுள்ளது.
மறுபுறம், ஆளுங்கட்சிக்கு எதிராக இடைத்தேர்தலைச் சந்தித்து ஒருவேளை தோல்வியைத் தழுவினால், அது கட்சியின் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அத்தகைய சூழல் உருவானால் கட்சியின் தலைமைப் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்குக் கைமாறும் நிலை ஏற்படலாம் என்ற பேச்சும் அறிவாலய வட்டாரத்தில் நிலவுகிறது. எனவே, வெற்றி வாய்ப்பு, அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்காலம் என அனைத்துச் சாதக பாதகங்களையும் தீர ஆலோசித்த பிறகே மு.க.ஸ்டாலின் தனது இறுதி முடிவை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
