“ஐயோ மக்களே உஷார்” பவுனுக்கு ரூ.15,000 நஷ்டம்? எந்திரத்தால்கூட கண்டுபிடிக்க முடியாத ‘சீன ரீனியம்’ தங்கம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ மக்களே உஷார்” பவுனுக்கு ரூ.15,000 நஷ்டம்? எந்திரத்தால்கூட கண்டுபிடிக்க முடியாத ‘சீன ரீனியம்’ தங்கம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

Published

on

தங்கத்தில் ‘ரீனியம்’ என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்தப் பொடியை தங்கத்தில் கலந்தாலும், நகை பரிசோதனை எந்திரங்கள் கூட அதைக் கண்டுபிடிக்க முடியாது என்றும், 22 காரட் தங்கம் போலவே காட்டும் என்றும், 100 கிராம் பொடி சுமார் ரூ.2.80 லட்சத்திற்கு மேல் விலை கொண்டதாக இருக்கலாம் என்றும் வதந்திகள் கூறப்படுகின்றன.

இத்தகைய பொடி சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுவதாகவும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பவுனுக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பரவும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரீனியம் பொடியில் தங்கத்தை உருக்கி மீண்டும் வடிவமைத்தாலும் அது அசல் தங்கம் போலவே ஜொலிப்பதாக சில வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

இருப்பினும், இந்தத் தகவல்களை மெட்ராஸ் வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும், ரீனியம் பொடியை தங்கத்துடன் சேர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களைக் கொண்டு வதந்திகள் பரப்பப்படுவதாகவும், இதற்கு முன்பு பாதரசம் குறித்து பரவிய வதந்திகள் போலவே இதுவும் உண்மையற்றது என்றும், தங்கத்திற்கு நிகர் தங்கம் மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in