LATEST NEWS
“மனிதாபிமானமே இல்லையா..?” வயதான தூய்மைப் பணியாளரைத் தடியால் அடித்து நொறுக்கிய நபர்.. நடந்து என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா நகரின் 45-வது வார்டுக்குட்பட்ட பிரகாஷ் பஜார் பகுதியில், குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜனம்மா என்ற முதிய பெண் தூய்மைப் பணியாளரை வீட்டின் உரிமையாளர் ஒருவர் தடியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான தூய்மைப் பணியின்போது ஜனம்மாவிற்கும் அந்த வீட்டின் உரிமையாளருக்கும் இடையே சிறிய அளவில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், அவர் ஒரு வயதான பெண் என்று கூடப் பாராமல் தடியை எடுத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
சக பெண் தொழிலாளி தாக்கப்பட்டதைக் கண்டித்து மற்ற தூய்மைப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நல்கொண்டா டூ டவுன் காவல் நிலையத்தில் ஜனம்மா அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், ஜனம்மாதான் முதலில் தகாத வார்த்தைகளால் கடுமையாகப் பேசியதாக வீட்டின் உரிமையாளர் குடும்பத்தினரும், அப்பகுதி மக்கள் சிலரும் எதிர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்புப் புகார்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
