LATEST NEWS
“என் மனைவி பாகிஸ்தான் ஏஜென்ட்..!” கணவர் வெளியிட்ட பகீர் வீடியோ.. விசாரணையில் வெளிவந்த செம ட்விஸ்ட்.. பரபரப்பு சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், தனது மனைவி காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்த கணவர் ஒருவர், அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து வருவதாகப் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். மேலும், முன்பு இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்த தனது மனைவி, தனக்குத் தெரியாமல் ரகசியமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும் அவர் அந்தப் புகாரில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு, விசாரணையின் முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் காத்திருந்தது. மனைவி தன்னை அடித்துத் துன்புறுத்தியதால், அவர் மீது பழிவாங்கும் நோக்கில் கணவன் இத்தகைய பொய்யான உளவுப் புகாரை ஜோடித்துள்ளார் என்பது விசாரணையில் அம்பலமானது.
