“மக்கள் பணம் வீணா..?” பரந்தூர் விமான நிலையத்தை பாதியில் கைவிட்டது எப்படி..? தமிழக அரசைச் சரமாரியாகக் கேள்வி கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மக்கள் பணம் வீணா..?” பரந்தூர் விமான நிலையத்தை பாதியில் கைவிட்டது எப்படி..? தமிழக அரசைச் சரமாரியாகக் கேள்வி கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!!

Published

on

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு பாதியில் கைவிட்டது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரும், பதிப்பாளருமான கௌதமன் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்தத் திட்டத்திற்காக ஏற்கனவே அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு பாதியில் கைவிட்டது எப்படி?” என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். மேலும், தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்து ஆய்வுகளையும் முழுமையாக நடத்தி முடிவு எடுத்த பிறகு, தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை என அரசு எவ்வாறு கூற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் கடுமையாக வினவியது.

இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசுத் தரப்பு, பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் அதிகளவில் நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்கள் அமைந்துள்ளதால், இத்திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது மிகவும் சிக்கலானதாக உள்ளதாகத் தெரிவித்தது. இதன் காரணமாகவே இத்திட்டத்தைக் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in