LATEST NEWS
சம்பளதாரர்களுக்கு ஜாக்பாட்.! இனி 90% PF பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் – ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. முழு விவரம் உள்ளே…!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு மேற்கொண்ட புதிய முடிவின்படி, 55 வயதுக்குட்பட்ட தகுதியான சந்தாதாரர்கள் தங்கள் PF சேமிப்பில் 90 சதவீதம் வரை முன்கூட்டியே எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீத இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றிருந்த விதி தளர்த்தப்பட்டு, அந்தக் குறைந்தபட்ச இருப்பு வரம்பு 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை இழந்த பிறகு PF தொகையை எடுக்க இருந்த 12 மாதக் காத்திருப்புக் காலம் 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதும், ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர முறையான பணம் எடுப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும் முக்கிய மாற்றங்களாக அமைந்துள்ளன.
இருப்பினும், இந்தச் சலுகையில் கவனிக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகளும் உள்ளன. மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதி போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே, உரிய தகுதி நிபந்தனைகள், உச்ச வரம்புகள் மற்றும் கால இடைவெளி விதிகளுக்கு உட்பட்டு இந்தத் தொகையை எடுக்க முடியும். திட்டத் திருத்தங்களுக்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்களில் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசரத் தேவைகளில் கையில் பெரிய தொகை உடனடியாகக் கிடைப்பது ஊழியர்களுக்குப் பயனளித்தாலும், அதிகபட்சத் தொகையை முன்கூட்டியே எடுப்பது ஓய்வூதியக் காலச் சேமிப்பைக் குறைக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, 90 சதவீதம் வரை தொகையை எடுத்துவிட்டால் நீண்டகாலக் கூட்டு வட்டி பலன் பாதிக்கப்பட்டு, எதிர்கால ஓய்வூதிய நிதி கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. எனவே, அவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே நிதித் திட்டமிடலுடன் இந்த வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது.
